Sunday, 13 November 2016

தாய் மதமான பௌத்தம் திரும்பும் நிகழ்வு : 13 - நவம்பர் 2016, போதிசத்வா அண்ணல் அம்பேதகர் மணிமண்டபம், சென்னை




தமிழ்நாடு பவுத்த கூட்டியக்கம் சார்பாக 13 - நவம்பர் 2016 அன்று போதிசத்வா அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் தாய்மதமான பௌத்தம் திரும்பும் நிகழ்வு நடந்தேறியது.
இந்நிகழ்வு Ven. பிக்கு பிரக்யதீப் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது.

போதிசத்வா அண்ணல் அம்பேத்கர் மற்றும் பௌத்தம் பற்றிய பாடல்களை குழந்தைகள் அவர்களாகவே இயற்றி பாடிக்காட்டியது அற்புதமாயமைந்தது.

பிறகு பௌத்த கருத்துகளும் போதிசத்வா அண்ணல் அம்பேதகரின் "புத்தமும் அவர் தம்மமும்" புத்தகத்திலிருந்து சில வாசகங்கள் வாசிக்கப்பட்டன.  

அதன்பின், அண்ணலின் சிலைக்கு பிக்குகள் மாலையணிவித்தனர்.

திரிசரணமும், பஞ்சசீலமும் ஓதி அண்ணலின் 22 உறுதிமொழிகளைக் கூறி பௌத்தமேற்றனர்.

உணவு இடைவேளைக்குப்பின் பௌத்தம் குறித்த சந்தேகங்கள் நிவர்த்தி செய்யப்பட்டு கெஜட்டில் பதிய விண்ணப்பங்கள் நிரப்பப்பட்டு விழா இனிதே நிறைவேறியது.

இந்நிகழ்வில் 83 நபர்கள் பௌத்தம் திரும்பினர்,




No comments:

Post a Comment