Friday, 11 November 2016

பண்பாட்டுப் புரட்சியில் பௌத்தம் - பேராசிரியர் முனைவர் க. ஜெயபாலன்

பண்பாட்டுப் புரட்சியில் பௌத்தம் - பேராசிரியர் முனைவர் க. ஜெயபாலன்

பேராசிரியர் முனைவர் க.ஜெயபாலன் அவர்கள் சங்க காலம் தொடங்கி இக்காலம் வரை தமிழுக்குத் தொண்டு செய்து புகழ் எய்திய விழுப்புரம் மாவட்டத்துக்காரர்.  இந்திய வரலாற்றில் நீங்கா இடம் பெட்ரா செஞ்சிக்கோட்டைக்கு அருகிலுள்ள ஆத்திப்பட்டு எனும் ஊர்க்காரர்.  சென்னை, நந்தனம், அரசினர் ஆடவர்க் கலைக் கல்லூரி, தமிழ்த்துறையில் பேராசிரியராகப் பணியாற்றி வரும் இவர், தொடர்ந்து பல்வேறு நூல்களை வாசித்துப் பல்வேறு தளங்களில் இயங்கும் திரைக்கலை இயக்குனர்.  தமிழையும் திரைக்கலையையும் முறையாகப் பயின்று, பட்டங்களைப் பெற்றவர், இரண்டையும் இரண்டு கண்களாகப் போற்றுபவர்.  தொடர்ச்சியாகப் பல்வேறு அரங்குகளில், சமய விடுதலை, சமூக விடுதலைகளைப் பற்றி பேசி, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துபவர்.  பௌத்த மதத்தின் வாயிலாக, மதம்  பிடித்த மனிதர்களின் உள்ளங்களிலிருக்கும் கறைகளை அகற்றுபவர்.  இதனை "பண்பாட்டுப் புரட்சியில் பௌத்தம்" என்ற இந்த நூலின் வாயிலாக அறியலாம்.

எப்போதும் எளிமையாகத் தோன்றுவார்.  எடுத்த வேளைகளில் உறுதியாக இருப்பவர், சிரித்த முகத்த்தோடு காட்சியளித்தாலும் எல்லோரையும் சிந்திக்க வைப்பவர்.  பேசத் தெரிந்த எழுத்தாளர்.  அண்ணல் அம்பேதரைப் பின்பற்றி பௌத்த மதம் தழுவி, பௌத்தத்தின் வாயிலாகத்தான் தலித் மக்கள் முழுமையான விடுதலையை அடையமுடியும் என்று அழுத்தமாக நம்புவதோடு தொடர்ந்து செயல்படுபவர்.  இயக்குனராக இரண்டு குறும்படங்களை இயக்கி, உலக அளவில் விருதுகளைப் பெற்றவர்.  எழுத்தாளராகப் பத்து நூல்களை எழுதி பல்வேறு விருதுகளை வென்றவர்.  இதழ்களில் தொடர்ந்து எழுதுபவர், பேச்சளராகப் பேசி எல்லோருடைய உள்ளங்களிலும் நிற்பவர்.

பேராசிரியர் கெ. இரவி 
தமிழ்த்துறை.  அரசினர் ஆடவர் கலைக்கல்லூரி,
நந்தனம், சென்னை - சென்னை - 600 035.


புத்தகம் :  பண்பாட்டுப் புரட்சியில் பௌத்தம்
ஆசிரியர் : பேராசிரியர் முனைவர் க. ஜெயபாலன் 
வெளியீடு : நிலாசூரியன் பதிப்பகம் 
பக்கங்கள் : 192
விலை : ரூ.150/-
ISBN : 978-81-907965-2-1

No comments:

Post a Comment